சசிகலா கட்சியில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்...உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிப்பு

Apr 01, 2026,06:50 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தென் தமிழக அரசியலில் முக்கிய நகர்வாக ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன், தற்போது சசிகலா துவங்கி உள்ள கட்சியில் இணைந்துள்ளார்.


திடீர் அரசியல் மாற்றம் :


கடந்த சில வாரங்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஐயப்பன் திமுக-வில் இணைந்ததாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அந்த முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ஐயப்பன், இன்று சசிகலாவை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, சசிகலா துவங்கிய உள்ள புதிய கட்சியான அஇபுதமுக.,வின் அடிப்படை உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.


உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிப்பு:




சசிகலாவைச் சந்தித்த சில மணிநேரங்களிலேயே, ஐயப்பனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சசிகலா வெளியிட்டுள்ள மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், மதுரை மாவட்டத்தின் முக்கிய தொகுதியான உசிலம்பட்டி தொகுதியின் வேட்பாளராக ஐயப்பன் பெயர் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே உசிலம்பட்டி தொகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்றவராகக் கருதப்படும் ஐயப்பன், சசிகலா அணியில் இணைந்திருப்பது அந்தத் தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆதரவாளர்களிடம் புலம்பல் :


ஓபிஎஸ்.,ன் தீவிர ஆதரவாளரான ஐயப்பன், சமீபத்தில் தமிழக சட்டசபையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலினை பகிரங்களாக பாராட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளையும் பாராட்டிய அவர், தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, திமுக.,வில் சென்று இணைந்தார். கடந்த சில நாட்களாக திமுக.,வில் இருந்து வந்த இவர் நேற்று, மூன்று முறை முதல்வராக இருந்தேன் என சொல்லிக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், தன்னை நம்பியவர்கள் யாரையும் முன்னேற்றி விடவில்லை என தனது ஆதரவாளர்களிடம் புலம்பியதாக செய்திகளும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் பரவி பரபரப்பை கிளப்பி வந்தன.


அனாதையாக இருந்தேன் :


சசிகலா கட்சியில் சேர்ந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்பன் கூறுகையில், திமுக.,வில் இணைந்த பிறகு அனாதையாகவே இருந்தேன் என குற்றம்சாட்டி உள்ளார். ஓபிஎஸ் உடன் சேர்ந்து திமுக.,வில் இணைந்த தனக்கு சீட் தரவில்லை என அதிருப்தியில் அவர் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சசிகலா சந்தித்து, திடீரென அவரது கட்சியில் இணைந்துள்ளதும், கட்சியின் இணைந்த சிறிது நேரத்திலேயே புதிய பொறுப்பு வழங்கப்பட்டதுடன், அவர் ஏற்கனவே வெற்றி பெற்ற உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் சசிகலா இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்