லாஸ் ஏஞ்செல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்தேறியது. இதில் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓப்பன்ஹெய்மர் படம் விருதுகளை வாரிக் குவித்தது.
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிபட்சம் 13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில் சிறந்த நடிகர், இயக்குநர், படம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளிச் சென்றது. கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் படத்துக்காக தட்டிச் சென்றார்.

ஓப்பன்ஹெய்மருக்கு அடுத்தபடியாக புவர்திங்க்ஸ் படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இப்படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
ஆஸ்கர் 2024 விருது பெற்றவர்களின் முழு விபரம் :
* சிறந்த துணை நடிகை - டேவின் ஜோய் ரேண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
* சிறந்த அனிமேடட் குறும் படம் - வார் இஸ் ஓவர்
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - தி பாய் அன்ட் தி ஹெரோன்

* சிறந்த திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்
* சிறந்த தழுவல் திரைக்கதை - அமெரிக்கன் ஃபிக்சன்
* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - புவர் திங்ஸ்
* சிறந்த ஆடை வடிவமைப்பு - புவர் திங்ஸ்
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - புவர் திங்ஸ்

* சிறந்த சர்வதேச திரைப்படம் - தி ஜோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட்
* சிறந்த துணை நடிகர் - ரோபர்ட் டோவினி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
* சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் - காட்ஜில்லா மைனஸ் ஒன்
* சிறந்த பட தொகுப்பு - ஓப்பன்ஹெய்மர்
* சிறந்த டாக்குமென்ட்ரி (ஷார்ட் சப்ஜெக்ட்) - தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
* சிறந்த டாக்குமென்ட்ரி திரைப்படம் - 20 டேஸ் இன் மரியுபோல்
* சிறந்த ஒளிப்பதிவு - ஓப்பன்ஹெய்மர்
* சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்ட்ரி சுகர்

* சிறந்த ஒலிப்பதிவு - தி ஜோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட்
* சிறந்த இசை - ஓப்பன்ஹெய்மர்
* சிறந்த பாடல் - வாட் வாஸ் ஐ மேட் ஃபார் (பார்பி)
* சிறந்த நடிகர் - சில்லியன் மர்பி ( ஓப்பன்ஹெய்மர்)
* சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் ( புவர் திங்க்ஸ்)
* சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் ( ஓப்பன்ஹெய்மர்)
* சிறந்த படம் - ஓப்பன்ஹெய்மர்
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}