மும்பை: அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். இந்த விருதுகள் 1929ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை கோனன் ஓ பிரையான் தொகுத்து வழங்குகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் வழங்கும் விழாவிற்கு உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா தவிர, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோருக்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா சார்பில் இதுவரை ஏஆர்.ரஹ்மான், கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்கள் விருது வென்றுள்ளார்கள். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர் அழைப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே 2025ம் ஆண்டில் அகாடமியில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இந்தநிலையில், சர்வசேத அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பை பெற்றுள்ளனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}