கலிபோர்னியாவில் காட்டுத்தீ .. ஆஸ்கர் விருது தேர்வுக்கான பரிந்துரை அவகாசம்.. 2 நாள் நீட்டிப்பு

Jan 09, 2025,07:19 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் : தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான காலம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் ஹாலிவுட் ஹில்ஸ் மலைகள் உள்ளது. இங்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை பற்றிய காட்டுத்தீ மளமளவென பரவியது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கரிலான வனப்பகுதியும், அதையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.



இதற்கிடையில் ஜனவரி 08ம் தேதி ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகள் மீதான் ஓட்டுப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஓட்டெடுப்புக்கான அவகாசம் ஜனவரி 12ம் தேதியுடன் நிறைவடையும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் கலிபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அங்கு நிலைமையே தலைகீழாக மாறி உள்ளது. இதனால் ஆஸ்கர் பரிந்துரைக்கான ஓட்டளிப்பதற்கான கால அவகாசம் தற்போது ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


பரிந்துரை ஓட்டெடுப்பு மட்டுமல்ல அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் தற்போது தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 17 ம் தேதி தான் ஆஸ்கர் பரிந்துரையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இதுவும் தற்போது ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தேதி அடங்கிய விபரத்தை ஆஸ்கர் சிஇஓ பில் கிரமர் இமெயில் மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு

news

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு

news

மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

news

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்