சென்னை: OTT தளத்தில் வெளியாகும் வெப் சீரியல் மற்றும் தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஓடிடி தளத்தில் சினிமா,வெப் சீரிஸ் மற்றும் வெப் தொடர்கள் போன்றவை அதிகளவில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வெப் சீரிஸ் மற்றும் தொடர்களை ஏராளமானோர் கண்டு களித்தும் வருகின்றனர். இவற்றிற்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின், நடிப்பு மற்றும் உடை பலரையும் முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. இது மட்டும் இல்லாமல் தினசரி பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர்களும் மாணவ மாணவியர்களும் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் இணையத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் குழந்தைகள் பார்க்க கூடாத காட்சிகள், வன்முறையை தூண்டக்கூடிய காட்சிகளும் இருப்பதால் அவர்களின் மனம் மாற்றத்தை நோக்கி செல்கிறது. இதனால் குழந்தைகள் தவறான வழிக்கு செல்லவும் இது வித்திடுகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆதிசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா வெப் தொடர்களை எவ்வித தணிக்கையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தினசரி பலகோடி நபர்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒடிடி தளத்தில் வெளியாகும் சினிமா வெப் சீரிஸ்கள் மற்றும் வெப்தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திசய உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}