- க. யாஸ்மின் சிராஜூதீன்
பகலவனே ஏன் இந்த கோபம்
பூமியின் மீது ...?
மரங்களை வெட்ட அனுமதி அளித்ததாலோ....
என்ன செய்யும் பூமித்தாய் யாரிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் ...
புரிந்தாலும் கேட்டால்தானே.....
காடுகளை வீடாக்கினான் மனிதன்
வீட்டை பாலைவனமாக்குவதற்காக வா.....
யார் செய்த பிழையோ....
இருந்தாலும் உன் கருணையால்
சிறிது உன் கதிர்வீச்சின் வீரியத்தைக் குறைத்துக்கொள்...

இதமான ஒளி அளித்து
உயிர்களைக் காத்து நில்.....
உன் கோபத்தணலில் வாழுமா
உயிர்கள்...
சற்றே கருணைகொள்
உயிர்கள் மகிழ கார்முகிலுக்கும் இடம் கொடு....
சிறிது சடசடவென சிரித்து விட்டுப் போகட்டும் ...
உயிர்கள் கலகலவெனச் சிரிக்க...
பூமித்தாயும் மளமளவென தழைக்க ......
கோபமும்,அன்பும் உள்ளடங்கியதுதானே வாழ்கை...
கோடைக்காலம் என்பதால் கோபம் மட்டும் காட்டாதே....
இடை இடையே அன்பையும் காட்டிடு
உயிர்களைக்காக்கும் பகலவனே.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}