"அவன் இவனை அடிச்சான்.. இவன் அவனை அடிச்சான்".. ஈரானில் புகுந்து பதிலடி கொடுத்த பாகிஸ்தான்!

Jan 18, 2024,10:21 AM IST
இஸ்லாமாபாத்: ஈரான் ராணுவம், பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தாக்கிய நிலையில் இன்று, ஈரான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளுமா என்ற அச்சம் கிளம்பியுள்ளது.

பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணங்களில் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இங்குதான் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து அண்டை நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த தீவிரவாத முகாம்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது இந்தியதான். காஷ்மீர் எல்லைப் புறம் வழியாக நடந்த தீவிரவாத ஊடுறுவல்களுக்கு அளவே இல்லை. இப்போதுதான் சற்று அடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் தீவிரவாதிகள் தற்போது ஈரானுக்குள் புகுந்து கலவரம் செய்து வருவதால் ஈரான் நாடு ஆத்திரமடைந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் அல் அதில் என்ற தீவிரவாத குழு இயங்கி வருகிறது. இந்த குழுவைச் சேர்ந்தவர்கள், ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் கோபமடைந்த ஈரான் நேற்று அதிரடியாக பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சிலர் கொல்லப்பட்டனர்.



இதனால் அதிர்ச்சி  அடைந்தது பாகிஸ்தான். ஈரானுக்கு சரியான பதிலடி தரப்படும் என்று அது எச்சரித்திருந்தது. இந்த நிலையில் இன்று ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான்.  ஈரான் நாட்டின் சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணங்களின் எல்லையில் உள்ள சரவன் என்ற இடத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பலுசிஸ்தான் விடுதலைப் படை ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த இரு அமைப்புகளும் சுதந்திர பலுசிஸ்தானம் கோரி போராட்டம் நடத்தி வரும் அமைப்புகள் ஆகும். பலுசிஸ்தானில் ஏற்கனவே தனி நாடு கோரி போராட்டங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானும் பதிலடி கொடுத்துள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உரசல் போராக மாறி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஜெய்ஷ் அல் அதில் அமைப்பை கடந்த 2012ம் ஆண்டு நிறுவினர். இந்த அமைப்பு சமீப காலமாக ஈரானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வந்தது.  இதையடுத்து இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக ஈரான் அறிவித்தது.

ஏற்கனவே இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால், மத்திய கிழக்கில் அசாதாரண நிலை நிலவுகிறது. செங்கடல் பகுதியில் கப்பல்களைக் குறி வைத்து ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் - ஈரான் இடையே மோதல் வெடித்திருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது. ஈரான், பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுத நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்