திண்டுக்கல்: தைப்பூச திருவிழா ஜனவரி 26ம் தேதி பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆண்டின் முக்கியத் திருவிழாவான தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 26ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் அதிகாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஜனவரி 31ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவே வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலை 4:30 மணி அளவில் பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 4ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து பழனிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் வருகிற 31ம் தேதி, பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு அனைத்து வழிகளும் இலவசமாக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!
விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!
{{comments.comment}}