சென்னை: மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள், செப்டம்பர் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இந்த தற்காலிக மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
செப்டம்பர் 10 முதல் நவம்பர் 9 வரை:

ரயில் எண். 12654 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் அதிகாலை 03.30 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) முடிவடையும்.
ரயில் எண். 12638 மதுரை சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் காலை 04.45 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) நிறுத்தப்படும் (ரயில் எண்.12637 சென்னை எழும்பூர் மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும்)
ரயில் எண்.22662 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் காலை 6.35 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) முடிவடையும்.
ரயில் எண்.16752 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தாம்பரத்தில் காலை 06.45 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) பயணத்தைத் தொடங்கும்.
செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை:
ரயில் எண். 12653 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து காலை 00.03 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.22675 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து காலை 08.12 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) புறப்படும் (ரயில் எண்.22676 திருச்சிராப்பள்ளி சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்)
ரயில் எண்.22661 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.16751 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மாலை 6.42 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.16751 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மாலை 6.42 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.22158 சென்னை எழும்பூர் - மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரையில் இருந்து காலை 06.45 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும் (ரயில் எண்.22157 மும்பை சிஎஸ்எம்டி சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸில் எந்த மாற்றமும் இல்லை, இது வழக்கம் போல் சென்னை எழும்பூரில் முடிவடையும்)
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}