சேலம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) எம்.எல்.ஏ வேல்முருகன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தால் (தவெக) பாராட்டப்பட்ட பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி நல விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட, பெண் குழந்தைகளைப் பெற்றவர்களை "முட்டாள்கள்" என்று அழைத்தார். மேலும் ஒரு "கூத்தாடியை" கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ எப்படி அனுமதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் பேசுகையில், ஒரு நடிகர் 2 கிராம் தங்கம் பரிசாகக் கொடுத்தவுடன், சில முட்டாள்கள் தங்கள் பெண் குழந்தைகளை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஒரு தமிழனுக்கு சாதாரண அறிவு கூட இல்லையா?. உன்னால் பிறந்து, வளர்ந்து, வளர்க்கப்பட்ட அந்தப் பெண் - நாளை யாரோ ஒருவரின் மனைவியாக வாழப் போகிறவள் - அவளை உன் அப்பா, அம்மா முன்னிலையில், ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் முன்னிலையில், ஒரு சினிமா நடிகரை கட்டிப்பிடித்து முத்தமிட அனுமதிக்கிறாய்... இது என்ன மாதிரியான கீழ்த்தரமான பிறப்பு? என்றும் வேல்முருகன் பேசினார்.
தனது பேச்சின்போது ரஜினிகாந்த் ரசிகர்களையும் கூட அவர் விமர்சித்துப் பேசியிருந்தார். வேல்முருகனின் கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விஜய்யின் தவெக வைச் சேர்ந்த தஹிரா வேல்முருகனை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி, திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் வேல்முருகனுக்கு எப்படி தமிழ் பெண்களையும் குழந்தைகளையும் அவமானப்படுத்த மனம் வந்தது? திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஏன் இதைக் கண்டிக்கவில்லை? தன்னை 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளும் முதல்வர் இந்த நடத்தையை கண்டிக்க வேண்டாமா?
வேல்முருகன் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது பேச்சுக்கு திமுகவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தமிழக பெண்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்? வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய தஹிரா, வேல்முருகன் இந்த நேரத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது என்றும் கூறினார்.
தவெக தலைவர் விஜய், கல்வி சாதனைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வேல்முருகனின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் வேல்முருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளா். பெண் பிள்ளைகளை இது போல பேசுவது தமிழ்ப் பண்பாடு இல்லை. விஜய்யை அன்போடு அண்ணா என்று அழைப்பதில் என்ன ஆபாசம் வந்து விட்டது என்று அவர் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!
ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!
{{comments.comment}}