சென்னை: விவசாயிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாக்கியுள்ள பரமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி.வாசு உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லரை முன்னதாக பார்த்த இயக்குநர் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சபரிஸ் இயக்கத்தில் மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் உருவான கால்ஸ் படம் கொரோனா காலகட்டத்தில் வெளியானது. கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கிய இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது வரை இப்படம் 35 முறைக்கும் மேலாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்பட்டு டி ஆர் பி யில் நல்ல ரேட்டிங் பெற்று சாதனை படைத்து வருகிறது. அமேசான் பிரைமிலும் இதுவரை இப்படத்தை பல கோடி பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

அப்படிப்பட்ட சிறந்த படத்தை இயக்கிய, இயக்குனர் சபரிஸ் தனது அடுத்த படைப்பான பரமன் படத்தை, இன்ஃபினிட்டி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைக்க,இப்பட பாடல்களை வேல்முருகன் மற்றும் முகேஷ் பாடியுள்ளனர்.
இதில் சூப்பர் குட் சுப்பிரமணி கதை நாயகனாக நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே ஜெய்பீம், பரியேறும் பெருமாள், உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.

மேலும் பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை எதிர்பாராத ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். இவர்களுடன் ஹலோ கந்தசாமி, வி.ஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வியலையும் மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாம்.
இந்த நிலையில் பரமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களான பாரதிராஜா, பாக்யராஜ், எஸ் சி சந்திரசேகர், பி. வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

பரமன் படத்தின் ட்ரைலரை முன்னதாக பார்த்துவிட்ட இயக்குனர் சீமான், இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது. இப்படத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}