பாரீஸ் ஒலிம்பிக் 2024 : வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறி.. தோல்வியைத் தழுவினார் தீபிகா குமாரி

Aug 03, 2024,03:46 PM IST
பாரீஸ் : பாரீஸ் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பெண்களுக்கான வில் வித்தை பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில்,  அங்கு துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து ஏமாற்றத்தை அளித்தார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீசில் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 6க்கு 4 என்ற புள்ளிகள் பெற்று இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒற்றை பிரிவு வில்வித்தை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார். இவர், 16வது சுற்றில் ஜெர்மனியின் மிச்சிலி க்ரோப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.




காலிறுதிப் போட்டியில் தென் கொரிய வீராங்கனையுடன் மோதிய தீபிகா குமாரி அங்கு 4-6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்தை அளித்தார்.

ஒலிம்பிக் போட்டியின் 8வது நாளான இன்று (ஆகஸ்ட் 03) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், தனது மூன்றாவது பதக்கத்தை தவற விட்டுள்ளார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இதனால் அவர் தவற விட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், ஆண்களுக்கான 71 கிலோ பிரிவில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கி வருவதை விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்