பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின்.. அடுத்த அதிரடி.. "கோடியில் இருவர்" வெப் சீரிஸ்.. பிப். 25 முதல்!

Feb 23, 2024,04:42 PM IST

சென்னை: ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் உருவாகியுள்ள கோடியில் இருவர் வெப் சீரிஸ் பிப்ரவரி 25ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. இந்த வெப்சீரிஸ் ஐந்து நாட்களுக்கு ஒரு  எபிசோடாக ரிலீஸ் செய்யப்படவுள்ளது.


டூ கிரியேட்டிவ் லேப்ஸ் பெரும் பொருட்செலவில் கோடியில் இருவர் வெப் சீரிஸ் ஐ தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸ் ஐ பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்கேலர் நிறுவனம் இணைந்து  வழங்குகிறது. பெங்களூரில் பல வீடியோக்களை இயக்கிய சாஹித் ஆனந்த் இந்த வெப்சீரிசை இயக்கியுள்ளார்.




ஆனந்த் அகல்வாடி, போரிஸ் கென்னத், ரோகித் சுப்பிரமணியன், டான்னிலா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இணைந்து வசனங்களையும் எழுதி உள்ளனர். இந்த சீரிஸ் டைட்டில் பாடலுக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.


பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் இந்த சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் youtube காமெடி வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள். தற்போது முதல் முறையாக மாறுபட்ட கதைக்களத்தில் ஒரு கலகலப்பான காமெடி கலந்த முழுமையான வெப் சீரிஸில் நடித்து அசத்தியுள்ளார்கள். இவர்களுடன் அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக் ஆர் வி, நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர், வெட்டி பையன் வெங்கட் மற்றும் நிறைமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




கோடியில் இருவர் வெப் சீரிஸ் ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் காமெடி ட்ராமா சீரிஸாக உருவாகி உள்ளதாம். பரபரப்பான திரைக்கதையில் உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், லைவ் லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளதாம். கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வெளி மாநிலமான பெங்களூருக்கு பயணித்து செல்வர். அப்போது அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியை தொடங்குவர். அங்கு அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை இந்த சீரிஸின் கதையாக அமைந்துள்ளதாம். 


இது மட்டுமல்லாமல் ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள், என இன்றைய சமுதாயத்தில் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையிலான கதைக்களத்துடன் காமெடி கலந்து அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் கலக்கலான சீரியஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாம்.




சமீபத்தில் கோடியில் இருவர் வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். சோசியல் மீடியா முழுவதும் இந்த வெப் சீரிஸ் ட்ரெய்லர் வைரலாகி, தற்போது ட்ண்டாகியும் வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்