டெல்லி: லோக்சபாவுக்குள் நடந்த அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய மனோரஞ்சன் என்பவருக்கு மைசூரு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாதான் பாஸ் கொடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
லோக்சபாவுக்குள் இன்று காலை சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் என்ற இருவர் ஊடுறுவி கலர் புகையை கிளப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியே நீலம் என்ற பெண்ணும், அமோல் ஷிண்டே என்ற நபரும் இதே பாணியில் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.
இதில் மனோ ரஞ்சனுக்கு, மைசூரு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாதான் பாஸ் கொடுத்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான பாஸும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் பிரதாப் சிம்ஹா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவிக்கையில், பிரதாப் சிம்ஹா பொறுப்பான எம்.பி. அவர் அறிமுகம் இல்லாமல் யாருக்கும் பாஸ் கொடுத்திருக்க முடியாது. அறிமுகம் இருந்திருப்பதால்தான் பாஸ் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த முறை நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்ததும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் என்று கூறியுள்ளது சர்ச்சையை மேலும் வலுவாக்கியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மனோரஞ்சனுக்கு 35 வயதாகிறது. மைசூரு விவேகானந்த் பல்கலைக்கழகத்தில்தான் அவர் பொறியியல் படித்துள்ளார். இவரது தந்தை மைசூரில் உள்ள விஜயநகரில் தங்கியிருக்கிறார். பிரதாப் சிம்ஹா, கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் போட்டியிட்டு 43.46 சதவீத வாக்குகள் வாங்கி அபார வெற்றி பெற்றவர். பின்னர் 2019 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு 52.27சதவீத வாக்குகள் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதாப் சிம்ஹா அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தவர். பல பத்திரிகைகளில் இவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் கூட எழுதியுள்ளார்.
சபாநாயகரிடம் நேரில் விளக்கம்

இதற்கிடையே, எம்.பி. பிரதாப் சிம்ஹா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தனது அலுவலகத்தை மனோரஞ்சன் அணுகியதாகவும், புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்க பாஸ் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதையடுத்து தனது பி.ஏ.தான் பாஸ் கொடுத்துள்ளதாக தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் எம்.பி. சிம்ஹா.
அத்தோடு தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் எம்.பி. சிம்ஹா. அதில் நாடாளுமன்றத்தைச் சுற்றிப் பார்க்க வந்த வித்யாவர்த்தக கல்லூரி அரசியல் அறிவியல் மாணவர்களுடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தை எம்.பி. சிம்ஹா வெளியிட்டுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}