மும்பை: பிப்ரவரி மாதம் 29ம் தேதி முதல் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை நிறுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது மக்களிடையே பல்வேறு குழப்பங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இன்றைய நவீன காலகட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் ஒரு பரிவர்த்தனை. இதனை தவிர்த்து பணபரிமாற்றம் என்பது மிகவும் கடினமானதாக மக்கள் பார்க்கும் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலிகளில் ஒன்றாக பேடிஎம் உள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பேடிஎம் நிறுவனம் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வங்கிச் சேவைக்கு ரிசர்வ் வங்கி தற்பொழுது தடை விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி பேடிஎம் நிறுவனம் மீது ரிசர்வ் வங்கி அதிரடியாக வங்கி செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. வருகிற 29ம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு 35ஏவின் படி இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கிமேற்கொண்டுள்ளது. புதிதாக வைப்பு நிதி பெறவோ, வாடிக்கையாளர்களுக்கு கடன் பரிவர்த்தனைகளோ மேற்கொள்ளக்கூடாது, முன்கூட்டியே ப்ரீபெய்டு வசதிகள், வாலெட்டுகள், பாஸ்ட் டேக், போக்குவரத்து அட்டை பயன்பாடு உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் பேடிஎம்க்கு ரிசவ் வங்கி தடை விதித்துள்ளது. பிப்ரவரி 29 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் பணத்தை இருப்பு உள்ளவரை திரும்பி பெற்றுக் கொள்ள இயலும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை முற்றிலும் நிறுத்த கொள்ளவும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மட்டும் மேற்கொள்ளவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இப்போது மக்களுக்கு எழுந்துள்ள குழப்பம் என்னவென்றால் பேடிஎம் பயன்படுத்தி யுபிஐ வசதியை பயன்படுத்த முடியுமா என்பதுதான். பேடிஎம் வங்கிக் கணக்குடன் உங்களது பேடிஎம் யுபிஐ இணைத்திருந்தால் அதை பயன்படுத்த முடியாது. அதேசமயம், பிற வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் வழக்கம் போல பயன்படுத்த முடியும். அதேசமயம், மொபைல் போன் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது. அந்த வசதிகள் அனைத்தும் பிப்ரவரி 29ம் தேதியுடன் முடிவுக்கு வரும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}