தவறான கணிப்பு.. மக்கள் வானிலை மையத்தை கேள்வி கேட்கணும்.. தமிழ்நாடு வெதர்மேன் ஆவேசம்!

Jan 30, 2025,08:36 PM IST

சென்னை:   தனியார் வானிலை ஆர்வலர்கள் எதையும் எதிர்ப்பார்த்து கூறுவதில்லை. பொதுமக்களுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சுயாதீனமாக இதைச் செய்கின்றனர். வானிலை ஆய்வு மையம் 2024ம் ஆண்டு பெங்கல் புயலை சரியாக கணிக்கத் தவறியது குறித்து மக்கள் கேட்க வேண்டும். மக்களின் வரிப்பணம் இது என்று கோபமாக கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.


வட கிழக்குப் பருவ மழை மற்றும் தென் மேற்குப் பருவ மழைக்காலம் என இரு வகையான மழைக்காலம் நம்முடைய நாட்டில் உள்ளது. இந்த மழைக்காலத்தில் அதீதமான மழைப் பொழிவு தமிழ்நாட்டுக்குக் கிடைப்பது என்பது வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில்தான். கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் இந்த நேரத்தில்தான் அதிக அளவிலான மழைப்பொழிவு இருக்கும்.


மழைக்காலங்களில் வானிலை மையத்தின் பக்கம்தான் அனைவரின் கவனமும் திரும்பியிருக்கும். எப்போது கன மழை பெய்யும், எப்போது புயல் வரும் என்பது குறித்து வானிலை மையம் தரும் அப்டேட்டுகளுக்காக மக்கள் காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தனியார் வானிலை ஆர்வலர்களும் அரசு டேட்டாக்களின் அடிப்படையில் கணிப்புகளைக் கூறி வருகின்றனர். அதில் முதன்மையானவராக, மக்களின் அதிக பாராட்டுக்களைப் பெற்றவராக இருப்பவர் பிரதீப்ஜான். தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் இவர் தனது மழைக்கால கணிப்புகளைக் கூறி வருகிறார்.




வானிலை மையம் போல இல்லாமல் மிகவும் விரிவாகவும், எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையிலும், விலாவாரியாகவும்  தனது கணிப்புகளை கூறுவது வழக்கம். ஆங்கிலமோ தமிழோ இரண்டிலும் இவர் கணிப்புகளைக் கூறும் விதம்தான் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதேபோல சில நேரங்களில் கணிப்புகளை மீம்ஸ் வடிவிலும் இவர் சொல்வது பலரையும் ஈர்த்துள்ளது.


ஆனால் கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழைக்காலத்தின்போது இவரது கணிப்புகளை சிலர் கடுமையாக குறி வைத்து விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பிரதீப் ஜான் விடவில்லை. அவரும் சரிக்குச் சரி பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியின்போது, பெருமழைக்காலத்தின்போது, தனியார் வானிலை ஆர்வலர்கள் புகழுக்காக பேசுகிறார்கள் என்று கூறியிருந்தார். இது சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


இதற்கு தற்போது பிரதீப் ஜான் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தனியார் வானிலை ஆர்வலர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் மக்களுக்கு தங்களது கணிப்புகளைக் கூறுகிறார்கள்.


2024 பெங்கல் புயல் தாக்குதல் மற்றும் 2023ல் தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஆகியவற்றை துல்லியமாக கணிப்பதில் வானிலை மையம் தவறிவிட்டது. இதற்காக மக்கள் வானிலை மையத்தை கேள்வி கேட்க வேண்டும். இதுதொடர்பாக வானிலை மையத்தின் தோல்வி குறித்து விசாரிக்க வேண்டும் என்று மக்கள் கேட்க வேண்டும். அவர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுவது மக்களாகிய நம்முடைய பணம்.


பொறுப்பு பொறுப்பு என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்கள் அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும்.


ரோடு சரியில்லைன்னா நாம கேட்கிறோம்

தண்ணீர் வரலைன்னா நாம கேட்கிறோம்

கரண்ட் கட் ஆனா கேட்கிறோம்

வானிலை அப்டேட் சரியில்லன்னா நாம கேட்க மாட்டேங்கிறோம்


எல்லாமே நம்முடைய மக்கள் கடுமையாக உழைத்து கொடுக்கும் வரிப்பணம்! என்று ஆவேசமாக கேட்டுள்ளார் பிரதீப் ஜான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்