Kamarajar Poem: கல்விக்கண் தந்த தெய்வம்

Jul 15, 2026,10:50 AM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி 


உயர்ந்த தோற்றம்... உருக்குலையா உள்ளம் ...

இரும்பின் உறுதி இளகிய மனது...

படிக்காத மேதை தான் ...

பார்போற்றிய பாமரன் தான் ...


பட்டினியை அறிந்ததனால்... பசித்த வயிறுக்கு உண விட்டவன் தான் ...

கல்வியின் வாசனையைக்

காலம் முடியும் வரை சுமக்கச் சொன்னவன் தான்...


காலா காந்தியாம்... 

காலத்திற்கும் பேர் கொண்ட 

சீர்திருத்தவாதியாம்...




தொழிலையும் பெருக்க வைத்தான்...

பாடசாலையும் திறந்து வைத்தான்...

சாதி மதம் கடந்தவன் தான் ....

சமத்துவம் நிலை நாட்டியவன் தான்...


பதவி ஆசை இல்லாத பண்பாளன்தான்... 

பிறருக்குப் பதவி தந்த மாண்பாளன் தான்...

தொலைநோக்குப் பார்வை கொண்டவன் தான்... 

தொடர்ந்து மக்கள் மனதில் நின்றவன் தான்...


வாழ்வை வரலாறாக்கியவன்...

ஏழைப் பங்காளனவன்   ...

எளிமையின் தூய்மை அவன்... 

வலிமையின் வார்ப்பு அவன்  ...

கர்மவீரனாய் தடம் பதித்தவன் 

தர்மவானாய் உலகில் நிறைந்தவன் 

அவனே கல்விக்கண் தந்த எங்கள் காமராசனாம்.


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்