இதப்பார்ரா..  எதுக்கெல்லாம் கோபம் வருது பாருங்க.. இதுக்கெல்லாமா குண்டு வீசுவாங்க!!

Nov 10, 2023,04:00 PM IST
சென்னை: சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கான காரணத்தை கேட்டால் மக்களே அதிர்ந்து போவீர்கள். 

அப்படி என்ன தான்  காரணம்  என்கிறீர்களா? தொடர்ந்து படிங்க.

சமீபத்தில், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது. இந்த நிலையில் தற்பொழுது 
சென்னையில் மீண்டும் ஒரு குண்டு வீச்சு. அதுவும் கோவிலில்.

இதை கேட்டவுடன் ஆஹா... இது "தீவிரவாதிகள்" வேலையாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிய வந்தது உண்மை. அதைக் கேட்டதும் அதிர்ச்சி வருவதற்குப் பதில் சிரிப்பும், ஆச்சரியமும்தான் காரணம். குண்டு வீச்சுக்கான காரணம் அப்படி.



சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் உள்ளது வீரபத்திர சுவாமி கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் தான்  முரளி கிருஷ்ணன் என்பவர். இவர் மது போதையில் கோவிலில் பெட்ரோல் குண்டுவீசி அப்பகுதி மக்களை கதிகலங்க வைத்தார். நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து முரளி கிருஷ்ணனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையின்போது முரளி கிருஷ்ணன் சொன்ன காரணம் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டது..

முரளி கிருஷ்ணன் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக இங்கதான் சாமி கும்பிடுகிறேன். ரொம்ப பக்தியானவன் நான். இந்த சாமியிடம் நிறைய கோரிக்கை வைத்தேன்.. வேண்டுதல் வைத்தேன்.. ஆனால் எதுவுமே நிறைவேறவில்லை. கடவுள் எனக்கு எதுவுமே செய்யலை.. அப்படிச் செய்யாத கோபத்தில்தான் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார் முரளி கிருஷ்ணன்.  இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.

ஏய்யா ராசா.. எதுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசுறதுன்னு விவஸ்தை இல்லையா என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்