சென்னை: பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவரான தயாரிப்பாளர் வி.ஏ. துரை மரணமடைந்தார்.
கஜேந்திரா, லவ்லி, லூட்டி, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் வி.ஏ. துரை. ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தையும் இவர்தான் தயாரித்தார். படத் தயாரிப்புத் தொழில் நலிவடைந்து போனதால், துரையும் நொடித்துப் போயிருந்தார். சிரமமான நிலையில் இருந்து வந்த அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

சர்க்கரை நோய் அதிகமாகி ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்த அவர் நேற்று இரவு தனது வீட்டிலேயே மரணமடைந்தார். அவருக்கு வயது 69. காலமான வி.ஏ. துரைக்கு,விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவியர் உண்டு.
முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என இரு மகள்களும், 2வது மனைவிக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் சென்னை வளசரவாக்கம் கடம்பாடி அம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்
வி.ஏ. துரை மறைவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான வி. ஏ. துரை அவர்கள் சற்று முன்பு காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}