புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எம்பிக்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு விடை கொடுக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தை மத்திய அரசு பெரும் பொருட் செலவில் கட்டியுள்ளது. அந்தக் கட்டடத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடம் பெயரவுள்ளன. நேற்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது நாளை முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு அமர்ந்து அனைத்து எம்.பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக அனைத்து எம்பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் , குழுவாகவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்ய சபா ஜெகதீப் தங்கர், ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே, டி ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் முன்பு சுமார் 750 எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தனர் .அப்போது பாஜா எம்பி நர்கஹாரி அமீன் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறு பரபரப்பு நிலவியது. பின்னர் அவருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்ட பிறகு போட்டோ எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் பல சட்டம் நடைமுறைகளை உருவாக்கியதுடன் மட்டுமல்லாமல் காரசாரமான விவாதங்களையும் கண்டிருக்கிறது. இந்திய அரசியலின் பல முக்கிய தலைவர்களின் கம்பீரக் குரல்களும் ,அவர்களின் விவாதங்களும் அரங்கேறி இருந்தது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் வட்ட வடிவிலானது. 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இந்த கட்டிடம் 1921 ஆம் ஆண்டு முதன் முதலில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் நாடாளுமன்ற முதல் கூட்டம் 1927 ஜனவரி 19-ல் நடைபெற்றது. கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த நாடாளுமன்ற பழைய கட்டிடத்திற்கு விடை கொடுத்துபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளிலும் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}