அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!

Jun 12, 2025,06:55 PM IST

அகமதாபாத் : அகமதாபாத்  விமான விபத்தில் பயணம் செய்தவர்களில் 133 பேர் பலியாகியுள்ளனர். பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து  லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஏர் இந்திய விமானம் ஒரு மருத்துவ விடுதியில் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.


அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 3 நிமிடத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் விமானம் கீழே விழுந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பயணிகள் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர்  என்று தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.    




ஆமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் பெற 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகர காவல்துறை அவசர சேவைகள் மற்றும் தகவல்களுக்கான  07925620359 எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

news

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்