சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள இணையதளங்களை அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட 8.51 லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம் முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகளை அறிய இணையதளங்களை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
https://www.tnresults.nic.in/wpprex.htm
2023ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வை எழுதியோரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தார்கள். 2022ம் ஆண்டு இது 93.80 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதி க அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தன என்பது நினைவிருக்கலாம்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}