சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. புதுச்சேரி, காரைக்காலிலும் பிளஸ்டூ தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
இன்று தொடங்கும் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 22ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் மொத்தம் 7.25 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களின் வசதிக்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். முதல் கால் மணி நேரம் கேள்வித்தாளைப் படிக்க அவகாசம் அளிக்கப்படும். 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு எழுதலாம். இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உரிய அடையாள அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மாணவ மாணவியர் பிட் அடிப்பது ஆள் மாறாட்டம் செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துத் தேர்வு மையங்களிலும் போதிய காற்றோட்ட வசதி, வெளிச்சம், மின்விசிறி வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் உள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1 - பத்தாம் வகுப்பு தேர்வுகள்
பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தேர்வானது மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வுகள் முடிந்த பின்னர், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கும். ஏப்ரல் 8ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
தேர்வுகள் தொடங்கி விட்டன.. மாண, மாணவியரே நம்பிக்கையோடும், அச்சமில்லாத மனப்பான்மையுடனும் ரிலாக்ஸ்டாக தேர்வுகளை எழுதுங்கள்.. எதுவுமே வாழ்க்கையின் முடிவு அல்ல.. எல்லாமே தொடக்கம்தான். எனவே எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக தேர்வுகளை எழுதுங்கள்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}