டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் அளவில் சிறிதாக இருந்தாலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணங்களை அது எதிர்கொள்ளப் போகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமரின் இந்தப் பேச்சு, ஏற்கனவே இந்த சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்பாக நிலவி வரும் பல தகவல்கள் உண்மையாக இருக்குமோ என்று எண்ண வைப்பதாக உள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. இன்று சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. பழைய நாடாமன்ற வளாகத்தில் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் நிறைவு நாளில் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும்.
இன்று தொடங்கும் கூட்டத் தொடருக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி நிறுவனங்களுக்கு ஒரு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:
இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அளவில் சிறியதுதான். ஆனால் நிகழ்வுகளில் மிகப் பெரிதாக இருக்கும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணங்களை நாம் சந்திக்கப் போகிறோம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
நிலவில் இன்று இந்தியா காலடி எடுத்து வைத்துள்ளது. ஜி20 மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். இது நாட்டின் சாதனைகளாகும். சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியானது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் பன்முகத் தன்மையை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.
ஜி20 மாநாட்டின் வெற்றியானது மிகவும் அசாதாரணமானது. இந்தியாவின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக உள்ளது என்ற செய்தியை உலகுக்குக் காட்டியுள்ளது என்றார் பிரதமர் மோடி.
இன்று தொடங்கும் சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறும். இக்கூட்டத்தின் அஜென்டா குறித்து முதலில் தெரிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் ஆட்சேபனைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அது வெளியிடப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடப்படாத பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இடம் பெறவிருப்பதாக ஒரு பரபரப்பு நிலவுகிறது.
அதாவது இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆகியவையே அது. இதுகுறித்து மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும் கூட இவை தொடர்பான அறிவிப்புகள் அல்லது மசோதா அதிரடியாக சமர்ப்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பிரதமர் வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியிருப்பதால் பரபரப்பு இன்னும் கூடியுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பது என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}