கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். இதற்காக இன்று முதல் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, தற்போது 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது.
அதன் பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் தங்க உள்ளார். விவேகானந்தர் பாறையில் மொத்தம் 45 மணி நேரம் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் உள்ள கடலோர காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தனிமையில் தியானம் செய்யவுள்ளதால், பூம்புகார் சுற்றுலா படகு குழாம் முழுவதுமாக பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துள்ளது.
சுற்றுலா படகில் செல்ல வந்த பொதுமக்களிடம் போலீசார் சோதனை செய்தனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் புனிதத் தலம் சென்று தியானம் செய்தார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பிரதமர் மோடி வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸார் அறிவித்துள்ளதால் குமரி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறை என்பது குமரிக் கடலில் உள்ள பாறைப் பகுதியாகும். இங்குதான் அமர்ந்து விவேகானந்தர் தியானம் செய்தார். இதனால் இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் வந்தது. இந்தப் பாறைக்கு அருகில்தான் இன்னொரு பாறை மீது பெரும்புலவர் திருவள்ளுவரின் கம்பீரமான சிலை அமைந்துள்ளது என்பது நினைவிருக்கலாம். மறைந்த முதல்வர் கருணாநிதி உருவாக்கிய இந்த சிலை, தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}