முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

Jun 19, 2026,05:47 PM IST

டில்லி : இந்தியாவில் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கவும், முறைசார்ந்த துறைகளில் (Formal Sector) புதிய பணியாளர்களை ஆதரிக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) தங்களைப் பதிவு செய்துகொண்ட புதிய ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 15 லட்சம் ஊழியர்களுக்கு, தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகையின் முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக விடுவிக்கிறார்.


தவணை முறைகள் எவ்வாறு வழங்கப்படும்?

புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களின் கணக்குகளுக்கு இந்த ஊக்கத்தொகை நேரடியாக இரு தவணைகளாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:


முதல் தவணை (ரூ. 7,500): புதிய பணியிடத்தில் இணைந்து வெற்றிகரமாக 6 மாத காலத்தைப் பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு, முதல் தவணையாக 7,500 ரூபாய் இன்று பிரதமர் மோடியால் விடுவிக்கப்படுகிறது.


இரண்டாவது தவணை (ரூ. 7,500): பணியில் சேர்ந்து ஓராண்டு (12 மாதங்கள்) முழுமையாகப் பூர்த்தி செய்யும் போது, மீதமுள்ள 7,500 ரூபாய் இரண்டாவது தவணையாக அவர்களின் கணக்கில் செலுத்தப்படும்.


இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்:




மத்திய அரசின் இந்தத் திட்டமானது இளைஞர்களிடையே முறை சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதையும், நிறுவனங்கள் புதிய பணியாளர்களைப் பதிவு செய்வதை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, பி.எப். (PF) கணக்குடன் இணையும் இளம் தொழிலாளர்களுக்கு இது ஒரு சிறந்த நிதி ஊக்கமாகவும், ஆரம்பகால வேலைவாய்ப்புத் பாதுகாப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று நாடு முழுவதும் உள்ள சுமார் 15 லட்சம் இளம் ஊழியர்கள் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்