டெல்லி: கடந்த 1000 ஆண்டுகளில் இந்தியா எத்தனையோ விஷயங்களைக் கடந்து வந்து விட்டது. ஆனால் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டத்துடன் நாங்கள் இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
என்டிடிவிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் லோக்சபா தேர்தல் குறித்தும், பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
இது இந்தியாவின் காலம். இந்த நேரத்தை நாம் தவற விட்டு விடக் கூடாது. வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் ஒரு சேர கொண்டு செல்ல விரும்புகிறோம். கடந்த 1000 ஆண்டுகளை நாம் கடந்து வந்து விட்டோம். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. இதுகுறித்து நான் தெளிவாக இருக்கிறேன். நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நாம் இழந்து விடக் கூடாது, வீணடித்து விடக் கூடாது.
இதுதொடர்பான திட்டங்களை நாங்கள் தீவிரமாக வடிவமைத்து வருகிறோம். மிகப் பெரிய அளவில் நடந்து வருகிறது. நீண்ட காலமாக இதை நான் செய்து வருகிறேன. ஓய்வு பெற்ற அதிகாரிகள், அமைச்சர்கள், செயலாளர்கள், பல்துறை நிபுணர்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.
எனது திட்டத்தை 25 ஆண்டுகள், 5 ஆண்டுகள், ஒரு வருடம், 100 நாட்கள் என பகுதி பகுதியாக பிரித்துள்ளேன். இதில் மேலும் பலவற்றை சேர்ப்போம். சிலவற்றை விட்டு விடவும் வாய்ப்புள்ளது. ஆனால் நமது நோக்கம் ஒன்றே.. எதிர்காலம் இந்தியாவுடையது.. அதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்திய சுதந்திரம் 75 ஆண்டுகள் ஆவதை பற்றி நான் பொருட்படுத்தவில்லை. இந்தியாவின் 100வது ஆண்டைத்தான் நான் பார்க்கிறேன். இதுகுறித்துத்தான் நான் தொடர்ந்து யோசித்து வருகிறேன். போகும் இடமெல்லாம் நிபுணர்களிடம் பேசி வருகிறேன். பல நிறுவனங்களிடமும் கேட்டு வருகிறேன். ரிசர்வ் வங்கியிடம் 90 ஆண்டு கால திட்டம் உள்ளது. அவர்களிடமும், 100 வருடத்தை நாடு தொடும்போது உங்களது திட்டம் என்ன என்று கேட்டுள்ளேன்.
என்னிடம் சிறிய நோக்கங்கள் இல்லை. உதிரி உதிரியாக நான் யோசிக்கவில்லை. மிகப் பெரிய அளவில், விரிவான சிந்தனையில்தான் நான் உள்ளேன். மீடியாவைக் கவர வேண்டும் என்ற நோக்கில் நான் எப்போதுமே செயல்படுபவன் கிடையாது என்றார் பிரதமர் மோடி.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 5வது கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 2 கட்ட வாக்குப் பதிவு பாக்கி உள்ளது.
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}