டெல்லி: எனது தாயார் இறந்த பின்னர் நான் யோசித்துப் பார்த்தேன். நிச்சயம் நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை.. நான் மனிதப் பிறவியாக இருக்கவும் வாய்ப்பில்லை.. கடவுள்தான் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்காக என்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலத்துக்கு பிரச்சாரத்திற்காக சென்ற பிரதமர் மோடி, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். நியூஸ் 18 செய்தியாளர் பிரதமர் மோடியிடம் எத்தனையோ வேலைகளைச் செய்கிறீர்கள்.. பல மாநிலங்களுக்கும் செல்கிறீர்கள்.. ஓய்வெடுப்பதே இல்லை.. உங்களுக்கு சோர்வே ஏற்படாதா என்று கேட்டார். அதற்கு மோடி அளித்த பதில் இதுதான்:
எனது தாயார் இருக்கும் வரை நான் எல்லோரையும் போலத்தான் பிறந்தேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு எனக்குக் கிடைத்த சில அனுபவங்களை வைத்துப் பார்த்தபோதுதான் எனக்குப் புரிந்தது நிச்சயம் நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று. நிச்சயம் என்னிடம் உள்ள ஆற்றல் சாதாரண மனிதர்களிடம் இல்லாதது. கடவுளால் மட்டுமே இதைத் தர முடியும். இந்த கருத்தில் நான் உடன்படுகிறேன்.

கடவுள்தான் என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்.. அவரது சக்தியை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவரது கருவி நான். என் மூலமாக அவர் எதையோ செய்ய விரும்புகிறார். அதற்காகவே நான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன். அவர்தான் இந்த சக்தியைக் கொடுத்துள்ளார். அப்படித்தான் நான் கருதுகிறேன். நிச்சயம் இதை பலர் கேலி செய்வார்கள், கிண்டலடிப்பார்கள்.. ஆனால் நிச்சயம், இது மனித உடல் அல்ல. ஒரு சாதாரண மனித உடலிலிருந்து இத்தகைய ஆற்றல் வர வாய்ப்பில்லை.
இது அவரது வேலை. அதனால்தான் இத்தகைய சக்தியை அவர் அளித்துள்ளார். இரக்கத்தைக் கொடுத்துள்ளார். எல்லாவற்றையும் செய்து முடிக்கும் தன்மையைக் கொடுத்துள்ளார். நான் ஒன்றுமே இல்லை. இது கடவுளின் வடிவம். எனது உருவில் அவர் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
கிட்டத்தட்ட "நான் மனிதன் அல்ல.. கடவுள்" என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் இந்தப் பேட்டியை பாஜகவினர் பல்வேறு தளங்களிலும் பரப்பி வருகின்றனர். தற்போது லோக்சபா தேர்தல் வட மாநிலங்களில் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் இந்த பேட்டி விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
இந்தியா பக்கம் வராதீங்க.. அப்புறம் அடி தாங்கமாட்டீங்க!.. பாக். அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!
அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார்.. விமான விபத்தில் உயிரிழப்பு!
சரத் பவார் - அஜீத் பவார்.. குரு சிஷ்யராக.. தந்தை மகனாக.. நெகிழ வைத்த உறவு!
மகாராஷ்டிராவை அதிர வைத்த அஜீத் பவார் விமான விபத்து.. மறக்க முடியாத தலைவர்!
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}