டெல்லி: சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி அனுசரிக்கப்படவுள்ள நிலையில் யோகாசனம் குறித்த சில அனிமேஷன் வீடியோக்களை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் மோடியையே அனிமேஷனில் வைத்து உருவாக்கப்பட்ட யோகா வீடியோக்கள் இவை.
பிரதமர் மோடிக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சானல் உள்ளது. நரேந்திர மோடி என்ற பெயரிலான அந்த யூடியூப் சானலில் அவரது பேச்சுக்கள், பிரச்சார உரைகள், நிகழ்வுகள் என அனைத்தும் உள்ளன. இந்த வீடியோக்களில் ஒன்றாக சில வருடங்களுக்கு முன்பு மோடியைப் போல அனிமேஷனில் உருவாக்கப்பட்ட வீடியோக்களும் அடக்கம். அதில் அனிமேஷன் மோடி பல்வேறு விதமான யோகாசனத்தை செய்வது போல உள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் விளக்க உரையுடன் கூடிய இந்த அனிமேஷன் வீடியோக்களை தற்போது தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ளார் பிரதமர் மோடி. சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்த வீடியோக்களை பகிர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோகாசனம் வித் பிஎம் மோடி என்ற தலைப்பிலான அந்த வீடியோக்களில் தியானம் உள்ளிட்ட பல்வேறு வகையான யோகாசனங்களை அனிமேஷன் மோடி செய்துள்ளார். அதாவது 16 வகையான ஆசனங்கள் குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மொத்தம் 32 வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வகையான ஆசனத்தையும் மோடிஅனிமேஷன் உருவம் செய்து காட்டுகிறது. யோகாசனம் மீது விருப்பம் உள்ளவர்களுக்கு இது உதவக் கூடும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வீடியோ இணைப்பு: https://www.youtube.com/playlist?list=PLBG6UuYpOcTtJuejaJLPYjhEcjdslRWGY
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}