டெல்லி: டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது நாடுதான் முதலில். நாடுதான் எல்லாம். நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அனைவரும் உறுதி எடுப்போம் என்று பிரதமர் மோடி பேசினார்.
இன்று நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய அடையாளமான டர்பன் அணிந்து அவர் வந்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் பிரதமர் மோடி ஆற்றிய உரையிலிருந்து:
இயற்கைச் சீற்றங்களால் கேரள மாநிலம் வயநாடு மிகப் பெரும் நிலச்சரிவையும், பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. தங்களது குடும்பத்தில் பலரைப் பறி கொடுத்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பலர் குடும்பங்களையே இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கைச் சீற்றங்கள் கடந்த சில வருடங்களாக பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாடு எப்போதும் துணை நிற்கும்.
நமது நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டபோது 40 கோடி மக்கள் தொகையுடன் இருந்தது. ஆனால் இன்று 140 கோடியாக அது உயர்ந்துள்ளது. 140 கோடி பேருடன் அது வளர்ந்த நாடாக முடியும். அதற்கான பாதையில்தான் நாம் நடந்து வருகிறோம். நமது நாடு விடுதலையாக வேண்டும் என்பதற்காக நாம் உயிரை விட்டுப் போராடவும் துணிந்தோம். அதேபோல நமது நாடு வாழ வேண்டும் என்பதற்காகவும் நாம் நம்முடையை ஒற்றுமையை வலிமையாக வெளிப்படுத்தி இணைந்து நடை போட முடியும்.
விக்சித் பாரத் என்பது எனது அரசின் வெறும் முழக்கம் மட்டும் அல்ல. அதை நாங்கள் சாதித்துள்ளோம். எங்களது இலக்குகளை அடைய கடுமையாக உழைத்துள்ளோம். நாடுதான் நமக்கு முதலில். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.
முந்தைய அரசுகள் அலட்சிய மனோபாவத்துடன் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வந்தனர். அப்படித்தான் பல வருடங்களை நாம் கண்டோம். அந்த மன நிலையை உடைக்க வேண்டியிருந்தது. அதை நாங்கள் உடைத்தோம். சாதாரண மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. அவர்களது கணவுகள் நிறைவேற அவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. சீர்திருத்தங்களுக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் அந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஏழைகளுக்காக, நடுத்தர மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, இளைஞர்களுக்காக நாங்கள் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தோம்.
இன்று நமது நாடு வீரத்துடனும், தீரத்துடனும் நாட்டை முன்னோக்கி நடை போட வைத்துள்ளது. நமது படை வீரர்களுக்கும், நமது விவசாயிகளுக்கும், நமது இலைஞர்களுக்கும், நான் இதற்காக சல்யூட் செய்கிறேன். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நமது நாடு கடன் பட்டுள்ளது. அவர்களது தியாகத்தை நினைவு கூற வேண்டிய நாள் இது.
உள்ளூருக்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. தன்னிறைவு குறித்து நாம் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உற்பத்திப் பொருள் என்ற நிலையை நாம் அடைந்திருக்கிறோம். நமது நாட்டின் இளைஞர்கள் வேகமாக செயல்பட விரும்புகிறார்கள். அவர்கள் மெதுவாக செல்ல விரும்பவில்லை. இது நமது நாட்டின் பொற்காலம்.
கொரோனா போன்ற பேரிடரின்போது மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய ஓடி வந்தனர். நமது கொரோனா வீரர்கள் நாட்டுக்காக உழைத்தனர். மக்களுக்காக உழைத்தனர். நமது படை வீரர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின்போது தீரத்துடன் செயல்பட்டனர். ஒவ்வொரு இந்தியரையும் தலை நிமிர்ந்து நடக்க வைத்தனர்.
3வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் எங்களது அரசின் ஒரே செய்தி.. மக்களுக்காக, அனைவருக்குமாக, ஒவ்வொரு குடும்பத்துக்காக நாங்கள் பாடுபடுவோம். நாட்டை புதிய உயரத்திற்கு இட்டுச் செல்வோம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
11வது முறையாக தொடர்ச்சியாக உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய சுதந்திர தின உரையானது அவரது 11வது உரையாகும். தொடர்ச்சியாக 11வது முறையாக அவர் சுதந்திர தின உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 3வது முறையாக பிரதமரான பிறகு அவர் ஆற்றிய முதல் சுதந்திர தின உரையாகும்.
India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!
பதிவு செய்யப்பட்ட கட்சின்னா என்ன.. தமிழக வெற்றிக் கழகம் போல.. தமிழ்நாட்டில்.. எத்தனை கட்சி இருக்கு?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!
மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!
Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!
ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!
செப்டம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்
{{comments.comment}}