நல்ல தலைவர், பொருளாதார மேதையை நாடு இழந்து விட்டது... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Dec 26, 2024,11:37 PM IST

 டில்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் உடனான தன்னுடைய பழைய நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மன்மோகன் சிங்கின் சாதனைகள், திறமைகள், பொருளாதார நிபுணத்துவத்தை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மன்ேமாகன் சிங் உடனான புகைப்படங்களை பகிர்ந்து, இரங்கல் தெரிவித்துள்ளார். 




அவர் தனது பதிவில், மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை நாடு இழந்துள்ளது. இந்த இறப்பிற்கு நாடே துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து, அனைவரும் மதிக்கும் மதிப்புமிக்க பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங்.  அவர் நிதியமைச்சர் உள்ளிட்ட அரசு பதவிகளையும் வகித்துள்ளார்.  தன்னுடைய பொருளாதா கொள்கையால் பல ஆண்டுளாக வலுவான முத்திரை பதித்தார். பார்லிமென்டில் அவரது செயல்பாடுகளும் புத்திசாலித்தனம் மிக்கதாக இருந்தன. ஒரு பிரதமராக நாட்டு மக்களின் வாழ்க்கையை தரத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.


அவர் பிரதமராக இருந்த போது நான் குஜராத்தின் முதல்வராக இருந்தேன்.அப்போது தொடர்ந்து அவருடன் நான் கலந்துரையாடுவேன். அரசு தொடர்பான பல விஷயங்கள் குறித்து நாங்கள் விரிவாக பேசுவோம். எப்போதும், அனைத்திலும் அவர் மனிதநேயம், ஞானம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மிகவும் துக்கமான இந்த நேரத்தில் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், கணக்கில்லாத தொண்டர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்