ராஜ்கோட்: பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்கோட் குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டையும், அதன் மக்களையும் என்னால் மறக்கவே முடியாது.. இவர்கள்தான் எனக்கு முதல் அங்கீகாரத்தையும், வெற்றியையும் கொடுத்தவர்கள் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதுதான் குஜராத் மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராஜ்கோட்டுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே மிக நெருக்கமான பந்தமும் இழையோடிக் கிடக்கிறது என்பது சுவாரஸ்யமான தகவலாகும். இந்த ராஜ்கோட்டிலிருந்துதான் பிரதமர் மோடியின் தேர்தல் அரசியல் வெற்றிப்பயணம் தொடங்கியது என்பதுதான் அந்த தகவல்.
2002ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில்தான் முதல் முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவர் போட்டியிட்ட முதல் தொகுதி ராஜ்கோட். பிப்ரவரி 24ம் தேதி தான் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நேற்றுடன் 22 வருடங்களை அவரது தேர்தல் அரசியல் பயணம் பூர்த்தி செய்துள்ளது. இன்று ராஜ்கோட்டில் அவர் குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நடந்திருப்பது எதிர்பாராத ஒற்றுமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜ்கோட் குறித்து அவர் குறிப்பிடுகையில், எப்போதுமே எனது இதயத்தில் ராஜ்கோட்டுக்கும், ராஜ்கோட் மக்களுக்கும் தனி இடம் உண்டு. இந்த மக்கள் தான் என் மீது நம்பிக்கை வைத்து,எனக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்தனர். அன்று முதல் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். இந்த சமயத்தில் நான் குஜராத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எதிர்பாராத ஒற்றுமை இது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் ராஜ்கோட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான வீடியோவும் தற்போது டிவிட்டரில் ரவுண்டடிக்கிறது. அதை பிரதமரும் ஷேர் செய்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}