கொல்கத்தா: நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல ஆக்ரா மெட்ரோ ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் 27 நகரங்களில் மெட்ரோ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய நிதியுதவியுடன், மாநில அரசுகளும் இணைந்து இதை செயல்படுத்துகின்றன. தினசரி ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மெட்ரோ சேவை சமீப காலமாக பயணிகளின் அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது.
விரைவாக செல்லுதல், போக்குவரத்து நெரிசல் இல்லாதது, சொகுசு பயணம், சுத்தமான உட்புற அமைப்பு, பயணிகளைக் கவரும் மெட்ரோவின் வடிவமைப்பு உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ திட்டம் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், மெட்ரோ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்ரா மெட்ரோ ரயில் இரண்டு பாதைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 29.65 கிலோமீட்டர். இது தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்திரா, ஐ எஸ் பி டி, ராஜா கி மண்டி ரயில் நிலையம், மருத்துவக் கல்லூரி, ஆக்ரா ரயில் நிலையம், உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை இணைக்கும் ரயில் திட்டம் ஆகும்.
கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ பாதை
இதேபோல கொல்கத்தா மெட்ரோவில் புதிய சாதனையாக, நீருக்கடியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டம் நகர்ப்புற போக்குவரத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
ஹூக்ளி ஆற்றின் கீழ் பூமிக்கு அடியில் சுமார் 50 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை ஹவுரா மைதானம் முதல் எக்ஸ்பிளனேடு வரை செல்லும். இது 16.6 கிலோ மீட்டர் தூரத்தில் நீருக்கடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே விழாவில் ஆக்ரா மெட்ரோ திட்டத்தையும் பிரதமர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தாஜ்மஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர வசதியாக மார்ச் 6 2024 முதல் இந்த மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் வந்துள்ளது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}