டெல்லி: இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யூபிஐ முறையில் பணப் பரிமாற்ற சேவையை காணொளி மூலம் இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
காணெொளி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மொரீசியஸ் பிரதமர் பிரவீன் ஜெகன்நாத், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமம் இன்றி பண பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யூபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றே சொல்லலாம்.
அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யூபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனை அடுத்து இலங்கை, மொரீசியஸ் நாடுகளும் யூபிஐ மூலம் பணம் செலுத்தம் நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளில் பணப்பரிவர்த்தனைகளுக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியா.
அது மட்டுமில்லாமல் மொரீசியஸ் நாட்டில் ரூபே கார்டு சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் யுபிஐ சேவையின் மூலம் இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய பயணிகளும் மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கும் இந்த சேவை பயன்படுத்த முடியும். இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆன இந்தியாவின வலுவான கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் வேகமாக மற்றும் தடையற்ற டிஜிட்டல் பணி பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}