டெல்லி: பாஜக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்று. பாஜகவிற்கு இது 44வது பிறந்த நாள். இந்திய மக்களின் விருப்பமான கட்சி பாஜக என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நிறுவப்பட்டது. பாஜக கட்சியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், 21ம் நூற்றாண்டில் நம் தேசத்திற்கு தலைமையேற்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருப்பதாய் பார்க்கிறார்கள். நீண்ட காலமாக தேசத்தை ஆண்டவர்களின் அடையாளமாக இருந்த ஊழல், ஜாதிவாதம், வகுப்பு வாதம், வாக்கு வங்கி மற்றும் வாரிசு அரசியலில் இருந்து இந்தியாவை பாஜக விடுவித்துள்ளது.
இன்றைய இந்தியாவின் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி எங்கள் கட்சி நல்லாட்சி மறு வரையறை செய்துள்ளது. எங்களது திட்டங்களும் கொள்கைகளும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பலத்தை அளித்துள்ளது.
பல சகாப்தங்களாக விளிம்பில் விடப்பட்டவர்கள் எங்கள் கட்சியில் ஒரே குரலையும் நம்பிக்கையும் கண்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி அனைவரின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் எளிதாக வாழ வழிவகுத்தும் வகுத்துள்ளது. பல ஆண்டுகளாக எங்கள் கட்சியை கட்டி எழுப்ப அனைத்து சிறந்த பெண்கள் மற்றும் ஆண்களின் கடின உழைப்பு, போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நான் மிகுந்த மரியாதை உடன் நினைவு கூறுகின்றேன். தேசம் முதலில் என்ற முழக்கத்துடன் எப்போதும் பணியாற்றும் இந்தியாவின் விருப்பமான கட்சி நாங்கள் என்பதை நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும்.
21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு தலைமை தாங்கும் கட்சியாக எங்கள் கட்சியை பார்க்கின்றனர்.எங்களது திட்டங்களும், கொள்கைகளும் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பலத்தை அளித்துள்ளது.பல தசாப்தங்களாக விளிம்பு நிலையில் விடப்பட்டவர்கள் தங்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக, நம்பிக்கை அளிக்கும் கட்சியாக நமது கட்சியைப் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையையும் எளிதாக்கும் நோக்கில், ஒட்டுமொத்த வளர்ச்சியை வழங்குவதற்காக நாம் உழைத்துள்ளோம்.புதிய மக்களவையை தேர்ந்தெடுக்க இந்தியா தயாராகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சரி செய்யப்பட்ட நிலத்தில் கட்டிடத்தைக் கட்டி எழுப்புவதற்கு மக்கள் இன்னொரு பதவிக்காலத்தை நமக்கு ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}