"அடுத்த 100 நாட்கள்.. ரொம்ப கவனமா இருங்க".. பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

Feb 18, 2024,07:57 PM IST
டெல்லி: அடுத்த 100 நாட்கள் மிக மிக முக்கியமானவை. அனைவரின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். பாஜகவினர் மிக மிக கவனமாக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த பாஜக தேசிய மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது லோக்சபா தேர்தல் தொடர்பாக அவர் பாஜகவினருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார். பிரதமரின் பேச்சிலிருந்து:

அடுத்த 100 நாட்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து வாக்காளர்களிடமும் செல்ல வேண்டும். ஒவ்வொருவரையும், ஒவ்வொரு சமுதாயத்தையும் நம் பக்கம் ஈர்க்க வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். அப்போதுதான் நமது கூட்டணியால் 400 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்.  பாஜகவால் 370 இடங்களைத் தாண்டி வெல்ல முடியும்.



அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக 3வது முறையாக நான் பதவியைக் கேட்கவில்லை. இந்த நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன். நான் எனது வீட்டைப் பற்றிக் கவலைப்பட்டிருந்தால் கோடிக்கணக்கானோருக்கு நான் வீடு கட்டிக் கொடுத்திருக்க முடியாது.

10 வருட காலம் எந்தத் தவறும் இல்லாமல் ஆட்சி செய்திருக்கிறோம். 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டிருக்கிறோம். இதெல்லாம் சாதாரணமான சாதனை அல்ல. ஒரு மூத்த தலைவர் ஒருமுறை என்னிடம் சொன்னார்.. முதல்வராக, பிரதமராக போதிய அளவுக்கு சேவை செய்து விட்டீர்கள்.. ஓய்வெடுங்கள் என்றார்.. நான் நான் தேசிய நலனுக்காக பாடுபடுகிறேன்.. ஆட்சி அதிகாரத்திற்காகப் பாடுபடவில்லை என்றார் பிரதமர் மோடி.

மகாபாரதப் போருடன் தேர்தலை ஒப்பிட்ட அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னதாகப் பேசுகையில் லோக்சபா தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டுப் பேசினார்.  அமித்ஷா பேசும்போது, நாட்டின் நலனுக்காக பாஜக தலைமையிலான அணியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.  ஆனால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, குடும்பக் கட்சிகளையும் ஊழலையும் சுமந்து வந்து கொண்டிருக்கிறது என்றார் அமித்ஷா.

தேசிய மாநாட்டில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இன்று  பேசியதைக் கேட்டு கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனராம். தேர்தல் மூடுக்குள் அவர்கள் முழுமையாக வந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. கடந்த மாதமே தேர்தல் தொடர்பான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை அனைத்து மாநில பாஜக தலைமையும் நடத்த ஆரம்பித்து விட்டன.

பிரதமர் கூறியபடி அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெறும் வகையில் தீவிரக் களப் பணியாற்றும் நோக்கில் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளனர் பாஜக தலைவர்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்