சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசவுள்ளார். இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். பல்வேறு மாநிலங்களுக்கும் அவர் செல்ல ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் பாஜக பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். திமுக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை வெகுவாகப் புகழ்ந்தும் பேசியிருந்தார்.
விமான நிலையம் டூ நந்தனம் ரோடு ஷோ
இந்த நிலையில் மீண்டும் இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, கல்பாக்கத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்குள்ள இந்திரா காந்தி அணு மின் நிலையத்திற்குச் செல்லும் அவர் அங்கு அணு உலை வளர்ச்சித் திட்டத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்வார். அதன் பின்னர் விமான நிலையம் திரும்பும் பிரதமர், மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக ரோடுஷோ நடத்தி நந்தனம் வருகிறார் பிரதமர். வழியெங்கும் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். நந்தனம் கூட்டத்தில் பிரதமருடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம், விமான நிலையம் முதல் நந்தனம் வரையிலான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் இடம், அண்ணாசாலை, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வாகனதாரர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணாசாலையிலிருந்து எஸ்.வி. படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சிபெட் ஜங்ஷன், 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மாற்று சாலைகளைப் பயன்படுத்துமாறு வாகனதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் வணிக வாகனங்கள் தடை செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
மத்தியகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை
இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ராமாபுரம் முதல் கத்திப்பாரா சாந்திப்பு வரை
அசோக்பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை
விஜயநகர் முதல் கிண்டி கன்கார்ட் சந்திப்பு வரை
அண்ணா சிலை முதல் மவுன்ட் ரோடு வரை
தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}