பிரதமர் நரேந்திர மோடியின்.. சென்னை வருகை ஒத்திவைப்பு.. தமிழக பாஜக அறிவிப்பு!

Jun 17, 2024,06:00 PM IST

சென்னை: வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வர இருந்த பிரதமர் நரேந்திர  மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. இதற்காக இத்தாலி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். 




இதற்கிடையே சென்னை டூ நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வரத் திட்டமிட்டிருந்தார். இதற்காக வரும் 20ம் தேதி  சென்னைக்கு வருகை தர இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக  ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.


பேசின்பாலம் யார்ட்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணிக்காக அடிக்கல் நாட்டுதல், ஆரல்வாய்மொழி டூ நாகர்கோவில், மேட்டுப்பாளையம் டூ திருநெல்வேலி, மற்றும் நாகர்கோவில் சந்திப்பு டூ கன்னியாகுமரி இடையே கட்டி முடிக்கப்பட்ட இரட்டை பாதை திட்டத்தை திறந்து வைத்தல், போன்றவற்றை காணொளி வாயிலாக திறந்து வைக்க இருந்தார். 


இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு பயணமாக சென்னைக்கு வருகை தர இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்குரிய  மாற்று தேதி அறிவிக்கப்படும் என கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். மறு தேதி அறிவித்த பிறகு  திட்டமிட்டபடி சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்வோம் என தமிழக பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்