அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

Sep 03, 2025,01:41 PM IST

தைலாபுரம் : குற்றச்சாட்டுக்கள் மீது விளக்கம் அளிக்க அன்புமணிக்கு செப்டம்பர் 10ம் தேதி வரை மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அறிவித்துள்ளார்.


கடந்த மாதம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி மீது ஒட்டுக்கேட்டது, கட்சிக்கு எதிராக செயல்பட்டது என்பது உள்ளிட்ட16 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்க அன்புமணிக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது. ஆனால் அன்புமணி தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமோ, பதிலோ அளிக்கப்படவில்லை.


இதற்கிடையில் நேற்று முன்தினம், பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அன்புமணி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ள 8 பேரும் தங்களின் கருத்துக்களை சீல் இட்ட கவரில் கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் அளித்துள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ அருள் கூறி இருந்தார். இதனால் அன்புமணி மீது ராமதாஸ் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு செப்டம்பர் 03ம் தேதி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திப்பார் என கட்சி சார்பில் கூறப்பட்டது.




இந்நிலையில் இன்று காலை தைலாபுரத்தில் கட்சியின் நிர்வாகக்குழுவை சேர்ந்த 22 பேருடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியும் இடம்பிடித்து இருந்தார். நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், தன் மீதான 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளிக்க அன்புமணிக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 10ம் தேதி வரை அவருக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என அறிவித்தார். 


இதனால் அன்புமணி மீது பாமக கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருப்பவர்கள் கட்சி தலைமையிடம் என்ன தெரிவித்தார்கள்? எதற்காக இந்த இரண்டாவது வாய்ப்பு? என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள செப்டம்பர் 10ம் தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்