சென்னை: ராமதாஸ் - அன்புமணி இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இரு தலைவர்களும் முதலில் பேச வேண்டும் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே சமீப காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல் போக்கு இன்று குறைந்து விடும் நாளை குறைந்து விடும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் இருவருக்கும் இடையே சமாதானம் பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. மேலும், மேலும் மோதல் போக்கே அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டினம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று சந்தித்தார் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசையும். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் தான் கட்சி நன்றாக இருக்கும் என்பதை நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இரு தலைவர்களும் பேச வேண்டும்.
அதற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறேன். இருவரும் பேசி தீர்வு கண்டால் கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினர் இடையே உள்ள மன உளைச்சலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதைத்தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
காத்திருந்த கருவூலம்
தேவையில்லை...!
தெய்வமாய்த் தெரியும் தேவதை போல் ஒரு ஆருயிர் நீ எனக்கு!
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
சென்னையில் இன்று முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
நீங்கா நினைவுகள்
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
{{comments.comment}}