"கூட்டணிதான் வைப்போம்".. அடிச்சுச் சொல்லிருச்சு பாமக.. கூப்பிடப்போவது யாரு.. சுவாரஸ்ய எதிர்பார்ப்பு

Feb 01, 2024,05:08 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக கூட்டணிதான் வைப்போம் என்று பாமக திட்டவட்டமாக கூறி விட்டது. இதையடுத்து அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்கப் போவது யார் என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனைக் கூட்டங்கள் சூடு பிடித்துள்ளன. அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதில் ஒரு தெளிவில்லை. இருப்பினும் அக்கட்சி தீவிரமாக குழுக்களை அமைத்து ஆலோசனைகளில் தீவிரமாகியுள்ளது.


எஸ் டி பி ஐ, புதிய பாரதம் உள்ளிட்ட சில கட்சிகள்தான் அதிமுக கூட்டணியில் இப்போதைக்கு உள்ளன.  பாஜக போய் விட்டது. பாமக, தேமுதிக நிலைப்பாடு தெரியவில்லை. ஆனால் அக்கட்சிகளுடன் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த நிலையில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.




இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது டாக்டர் ராமதாஸ் கூறுகையில், இந்நிலையில் லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கு உள்ளது.


கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம். இது தொடர்பான தீர்மானத்தை பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி முன்மொழிந்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை. பாமக தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பப்படி தனித்துப் போட்டியிட இப்போது தயாராக இல்லை. மாநில நலன், தேசிய நலனின் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். 


எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த முடிவு எடுக்கும் முழு அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளை அடையாளம் கண்டு பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம். குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக அமைத்த கூட்டணியில் பாமக போட்டியிட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்