- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
இரவும் வந்தது!
கனவும் வந்தது
கனவில் தலைவனும் வந்தனன்!
தவிக்கிறேனடி தோழி!
அதிகாலை வந்தது!
விழிகள் விழித்தன!
கனவு கலைந்தது!
மனசு தவிக்குது தோழி!
நேரம் சென்றது!
உண்ணும் நேரம் வந்தது!
தலைவன் இல்லையடி தோழி!
உண்ணப் பிடிக்குமா தோழி?

மாலை வந்தது!
மனதும் நொந்தது!
நிலவு வந்த பின்னும்
நித்திரை வரவில்லையடி தோழி!
பணிக்குச் சென்றவன்
வரவேண்டும்!
எந்தன் மனதும்
குளிர வழி வேண்டும்!
தூது செல்லடி தோழி!
விரைந்து செல்லடி தோழி!
எனை மறந்தனனோ
எனக் கேளடி தோழி!
சிற்றிடை மேகலை
மெலிகிறதே!
அவன் பற்றிய
வளைக்கரம் தளர்கிறதே!
அவன் கணவனா தோழி?
கேட்டுச் சொல்லடி தோழி!
உடன் ஓடி வரச் சொல்லடி தோழி!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கனேசன்!
இரவும் கனவும்!
அந்தக் கண்ணாடிக்காரன் கொடுத்து வைத்தவன்!
புரட்டாசி விரதம்.. ஒரு நிமிடக் கதை (24)
முதியோர் உடல் நலம்!
அம்மா பாடிய தாலாட்டு
காய்கறி தோல் துகையல்!
SOLITARY REPAIR.. மண்டைல ஏறவே இல்லையே ஜோ!
ஒரு பக்க கதை .. கதையின் பெயரே இதுதான் பாஸ்!
{{comments.comment}}