சென்னை: கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் பாடலாசிரியராக மட்டுமில்லாமல் கவிஞர், அரசியல்வாதி, நடிகர், பேச்சாளர் என பல்வேறு திறமைகளை பெற்றுள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1 கலந்து கொண்டு தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதன் மூலம் சினேகன் எந்தெந்த பாடலை எழுதினார். இதெல்லாம் சினேகன் எழுதிய பாடல்களா..? என ரசிகர்கள் தேட ஆரம்பித்து விட்டனர். அந்த அளவிற்கு இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது பிக் பாஸ் நிகழ்ச்சி.
நடிகராக, அமீர் இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்த பிரமோஷனைப் பெற்று உயர்திரு 420 திரைப்படத்தில் நாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதற்கிடையே கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், சினேகன் சின்னத்திரை நாயகியான கன்னிகாவை காதலித்து 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நான்கு வருட திருமண வாழ்க்கையில் தற்போது இந்த தம்பதிகள் பிரபலமாகிவிட்டனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் அழகான வாழ்க்கை தருணங்களையும் பதிவிட்டு வந்தார் சினேகன். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வந்தது.
கன்னிகா கர்ப்பம் தரித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார் சினேகான். ஐந்தாம் மாதம் வளைகாப்பு, ஒன்பதாம் மாதம் வளைகாப்பு, குழந்தை பெற்றெடுக்கும் நேரம் வந்துவிட்டது,குழந்தைக்கு தேவைப்படும் பொருட்களை முன்கூட்டியே வாங்குவது என அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் தான் ஜனவரி 25ஆம் தேதி சினேகன் கன்னிகா தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற- என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது..
தாயே எந்தன் மகளாகவும், மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் 25.1.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் இதயமும் மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது.. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்.. என்றும் அன்புடன் சினேகன், கன்னிகா சினேகன் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதுமை காதல்..!!
Memes: பாஸ் பாஸ்.. காதலி இல்லைன்னா பிப்ரவரி மாசம் மட்டும்தான் கஷ்டப்படணும்!
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
{{comments.comment}}