எர்ணாகுளம் : விபத்தை ஏற்படுத்தி விட்டு, காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, தப்பிக்க முயன்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஷியின் டிரைவிங் லைசன்சை போலீசார் ரத்து செய்துள்ளனர். இது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மஞ்சுமெல் பாய்ஸ். பலரின் பாராட்டுக்களையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்றது இந்த படம். கொடைக்கானல் குணா குகையில் எடுக்கப்பட்டது, படம் முழுக்க வரும் குணா படத்தின் அபிராமி பாடலின் இசை ஆகியவை மொழியை கடந்த தமிழ் ரசிகர்களையும் இந்த படம் பெரிதும் ஈர்த்தது. எளிமையான கதையில் இப்படி ஒரு திரில்லர் படமா? இப்படி கூட ரசிகர்களை மொத்தமாக கட்டிப் போட்டு, படத்துடன் ஒன்ற வைத்து படம் எடுக்க முடியுமா? என பலரையும் ஆச்சரியப்பட வைத்த சமீப கால இந்திய சினிமாவின் முக்கியமான படமாக இந்த படம் அமைந்திருந்தது.

இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் புதிய முகங்களாக இருந்தாலும் இந்த ஒரே படத்திலேயே பிரபலமாகி விட்டனர். இந்த படத்தில் சுபாஷ் என்ற மிக முக்கியமான கேரக்டரில் நடித்தவர் தான் ஸ்ரீநாத் பாஷி. எர்ணாகுளத்தில் காரில் சென்ற ஸ்ரீநாத், பைக்கில் வைத்த இளைஞர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த காட்சிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இருந்தாலும் அதிவேகமாக காரை ஓட்டி, விபத்தினை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரது டிரைவிங் லைசன்சை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகைகள் அளித்த பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, பலரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் இது போன்ற பிரச்சனையில் சிக்கி உள்ளது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}