சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி இன்று முதல் ஏப்., 13ம் தேதி மாலை 5மணி வரை காவலர்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வெயில், குளிர், இரவு, பகல் என்று பராது அனைத்து தரப்பினர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தல் குறித்த வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் இன்று முதல் 13ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3 சிறப்பு மையங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள் அனைவரும் இன்று முதல் 13-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்தில் சிறப்பு தபால் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பேஸின் பாலம் சாலை, மூலக்கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சியின் வடசென்னை வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் வடசென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவை தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.
அடையார் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், தென் சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.
செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம். தகுதியுள்ள போலீசார் வாக்குச்சாவடிகளுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
{{comments.comment}}