அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

Sep 07, 2026,11:15 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமையான இன்று ஸ்ரீ மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்து விரதம் இருந்து வழிபட வேண்டிய 'அஜா ஏகாதசி' அனுஷ்டிக்கப்படுகிறது. பாத்ரபதம் மாதத்தில் (ஆவணி -புரட்டாசி) தேய்பிறையில் கிருஷ்ணபட்சம் வரும் இந்த ஏகாதசி எம்பெருமான் மகாவிஷ்ணுவின் அருள் பெறவும்,பாவ விமோசனம் அடையவும் உகந்த நாளாகும்.


 'அஜா ஏகாதசி 'என்ற சொல்லுக்கு வருத்தத்தை நீக்குவது என்று பொருள். இந்த விரதம் ஒருவர் தெரிந்தும் தெரியாமல்  செய்த பாவங்களை வேரோடு அழிக்கும்.

 

நேரம்:

 

ஏகாதசி திதி தொடக்கம் :


ஏகாதசி திதி செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை 07:29 PM  துவங்குகிறது.


ஏகாதசி திதி நிறைவு :


ஏகாதசி திதி செப்டம்பர் 7 திங்கட்கிழமை( இன்று) 05.03 PM மணிக்கு நிறைவு. இன்று விரதம் அனுஷ்டிப்பது சிறந்தது.


பாரணை : விரதம் முடிவு செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை காலை  06 :02மணி முதல் 08 :33 மணி வரை. 


மாதம்: கிருஷ்ணபக்ஷம், (தேய்பிறை ) பாத்ரபதம்.


அஜா ஏகாதசியின் முக்கியத்துவம் -புராணக் கதை :




ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மகாபாரதத்தில் தர்ம புத்திரனுக்கு அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையையும்,அதன் பின்னணியில் உள்ள அரிச்சந்திர மகாராஜாவின் நெஞ்சை உருக்கும் கதையையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.


அஜா ஏகாதசி விரத கதை (சத்தியவான் அரிச்சந்திரன் கதை)-


அயோத்தியை ஆண்ட ரகு வம்சத்தின் மன்னரான அரிச்சந்திரன், " எந்த சூழ்நிலையிலும் பொய் பேச மாட்டேன்" என்ற சத்தியத்தை கொள்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனது சோதனை காலத்தில் விஸ்வாமித்திர முனிவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக தனது ஒட்டுமொத்த அரசையும், சொத்துக்களையும் மற்றும் அனைத்தையும் துறந்தான். 


வறுமையின் பிடியில் சிக்கிய மன்னன் முனிவருக்கான குரு தட்சணை  அடைக்க வேறு இல்லாமல் தனது மனைவி சந்திரமதியையும்,மகன் லோகிதாசனையும் ஒரு அந்தணருக்கு அடிமையாக விற்று விட்டான். தன்னை தானே ஒரு மயான காவலனுக்கு அடிமையாக விற்றுக் கொண்டான்.அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டை காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.


கௌதம முனிவரின் அறிவுரையின்படி -


ஒரு நாள் அரிச்சந்திரனின் மகன் லோகுதாசனை பாம்பு கடித்து மாண்டு போனான். மகனின் உடலை தகனம் செய்ய செய்ய தன்னிடம் காசு இல்லாமல் அழுது கொண்டே சந்திரமதி மயானத்திற்கு சென்றாள். காவல்காரனாக நின்று அரிச்சந்திரன் தன் மனைவி என்றும் பாராமல் சுடுகாட்டு வரியை கேட்டான். கடமைக்காகவும், சத்தியத்திற்காகவும் அவன் படும் கஷ்டத்தை கண்டு மனம் இறங்கிய கௌதம முனிவர் அங்கு தோன்றினார். 


அரிச்சந்திரனின் கஷ்டங்களைக் கேட்டு முனிவர் அரிச்சந்திரா உன்னுடைய முற்பிறவி வினைகளின்  பயனால்தான் இவ்வளவு துன்பப்படுகிறாய். எனவே,"அஜா ஏகாதசி அன்று நீ விரதம் இருந்து மகாவிஷ்ணுவை மனதார நினைத்து முழு உபவாசத்துடன் வழிபாடுகள் செய்ய உன் பாவங்கள் நீங்கும் என்று கூறினார்". 


முனிவரின் அறிவுரைப்படி அரிச்சந்திரன் அஜா ஏகாதசி அன்று பகவான் விஷ்ணுவை நினைத்து முழு உபவாசத்துடன் மிக தீவிரமான பக்தியுடன்  விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடுகள் செய்தான். அவன் விரதத்தை கண்டு தேவர்கள் பூ மழை பொழிந்தனர். அவனது மகன் லோகிதாசன் உயிர்த்தெழுந்தான். மனைவி சந்திரமதி மீண்டும் அரசி அரசியானாள். 


அரிச்சந்திரனுக்கு அவன் இழந்த நாடு, அந்தஸ்து, பெருமை, ஆகியவை மீண்டும் கிடைத்தன. இறுதியில் அவன் வைகுண்ட பதிவையும் அடைந்தான்.


அஜா ஏகாதசி விரத வழிபாட்டு முறைகள் :


இன்று  பல வீடுகளில் விரதம் மேற்கொள்வார்கள். சிலர்  நிர்ஜலா  (தண்ணீர் கூட அருந்தாமல்) அல்லது பால்,பழங்கள் மட்டும் உண்டு விரதம் மேற்கொள்வார்கள். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் சாத்விக   உணவை உண்ண வேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப விரதம் மேற்கொள்வது சிறப்பு.


காலையிலும், மாலையிலும் பூஜை அறையில் பகவான் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் சிலையோ அல்லது படமோ வைத்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்காரம் செய்து, சந்தனம், குங்குமம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். துளசி இலைகள் சம்மர் பித்து "ஓம் நமோ பகவதே வாசுதேவாய "என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதும், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் சிறப்பு.


விரத  பலன்கள்:


அரிச்சந்திரன் எவ்வாறு இழந்த ராஜ்யத்தை மீட்டானோ அதுபோல வாழ்வில் நியாயமான முறையில் இழந்த செல்வம், வேலைவாய்ப்பு, குடும்ப ஒற்றுமை,நிம்மதி, விடுபட்ட கல்வி,  போன்றவற்றை மீண்டும் பெற இந்த விரதம் மேற்கொள்வது சிறப்பு.


இந்த அஜா ஏகாதசி விரதத்தை முழுமையாக கடைப்பிடிப்பது ஆயிரம் அஸ்வமேதை யாகங்களை செய்ததற்கு இணையான புண்ணியத்தை தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.


அஜா ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவின் அருளால் அனைவரும் நல்வாழ்வு வாழ்வுமாக. மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்