சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்தது தொடர்பான வீடியோவை வெளியிட்ட இர்ஃபானிடம் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
இர்ஃபான், இர்ப்பான்ஸ் வியூ சேனலை நடத்தி வருகிறார். இதில் இவர் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கு பேன்ஸ் ஃபாலோவர் அதிகமானது. இதனைத் தொடர்ந்து இவர் உணவு வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது மட்டுமல்லாமல் தனது திருமணம், மனைவியின் வளைகாப்பு, குடும்ப நிகழ்ச்சிகளையும் வெளியிட்டு வந்தார்.
இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை முழுமையாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் டாக்டர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தனது குழந்தையின் தொப்புள் கொடியையும், ஏதோ துணிக்கடையை ரிப்பன் வெட்டி திறப்பது போல வெட்டியுள்ளார் இர்பான். இதை வீடியோவாகவும் போடவே பெரும் சர்ச்சையானது.
இவருக்கு சர்ச்சைகள் புதிதல்ல. குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்தான். இந்த விவகாரம் பெரிதாகவே சுகாதாரத்துறை மற்றும் ஊரக மருத்துவ சேவைத் துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் மருத்துவ கவுன்சிலிலும், போலீஸிலும் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர் நிவேதிதா ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது. அதேபோல போலீஸ் தரப்பில் இர்பானிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரி போலீசார் இதுதொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி, இர்பானிடம் விசாரணை தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}