சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைத் திங்கள் முதல் நாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவையொட்டி வீடுகள் தோறும் சர்க்கரைப் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்குப் படையல் வைத்து மக்கள் குடும்பத்தோடு சாமி கும்பிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பொங்கல் விழா என்பது அனைத்து மதத்தினராலும், சாதி சமயப் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். பல ஊர்களில் பல்வேறு மதத்தினர், ஜாதியினர் கூடி சமத்துவப் பொங்கலும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகள் சார்பிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதேபோல பல்வேறு கிராமங்கள், ஊர்களிலும் விதம் விதமான பொங்கல் விளையாட்டுக்களுடன்மாநிலமே களை கட்டிக் காணப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவில் சங்கராந்தி விழாவாக இது கொண்டாடப்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}