- ஷீலா ராஜன்
பொங்கல் வந்தாச்சு.. கோலம் போடுவதிலேயே காலை நேரப் பொழுதுகள் ஓடிப் போய் விடும். அதுவும் பொங்கலுக்கு முன்பு தெருவை அடைத்துக் கொண்டு கலர் கலராக கோலம் போட்டு நிமிர்ந்தால்தான் பல பெண்களுக்கு மனசில் நிறைவே வரும். ஆனால் கோலம் போடுவதை எளிதாக்க சில டிப்ஸ் இருக்கு தோழிகளே.. வாங்க சொல்றேன்.
சரோஜா தேவி காலத்து டெக்னிக்ஸ்தான்.. இருந்தாலும் இப்போதும் கை கொடுக்கும்.
காலியான வத்திப்பெட்டி

காலியான வத்திபெட்டில கோலமாவு நிரப்பி சிறிது இடைவெளி விட்டு மூடி விட வேண்டும். பின்பு வத்திபெட்டியை தலைகீழாக திருப்பி லேசாக அழுத்த சிறு சிறு கோடுகள் விழும் .. இதை வைத்து நீங்கள் பார்டர் வரையலாம். ஸ்வஸ்திக் ஸ்டார் போன்றவற்றை ஈசியாக போட முடியும்.
பழைய சல்லடை
பயன்படுத்தாத சல்லடையில் உள்ள வலைப்பகுதியை வெட்டி எடுத்து தனியா வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது உங்களுக்கு பெரிய வட்டம் வரைய சல்லடை பயன்படும்...
பேப்பர் கப்புகள்
வெட்டி எடுத்த வலையை நான்கு ஐந்து வட்டங்களாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பேப்பர் கப்புகளை எடுத்துக்கொண்டு அடிபாகத்தை கட் செய்து விடுங்கள்.. ஒரு பேப்பர் கப் உள்ளே வெட்டி வைத்த வலையை நுழைத்து அதன் மேல் இன்னொரு பேப்பர் கப்பை அழுத்தி விடுங்கள்... கோலமாவை நிரப்புங்கள் தரையில் வைத்து லேசாக தட்டினால் அழகாக சிறுவட்டம் வரும்..
இரண்டு மூன்று நிறங்களில் டம்ளர்களை நிரப்பினால் .அழகிய கோலத்தை போட்டு விடலாம்....
கோடுகள் இழுக்க ஆயில் கேன்
பழைய ஆயில் கேன்களின் நுனிப்பகுதியை அகலப்படுத்தி விட்டு டப்பாவில் கோலமாவு நிரப்பி கோடுகள் இழுக்க பயன்படுத்தலாம்.
பழைய குக்கர் கேஸ்கட்.... சிறியது பெரியது
இருக்கவே இருக்கு குக்கர் கேஸ்கட் வட்டம் போட... தரையில பெரிய கேஸ் கட்ட வச்சு அதுக்கு உள்ளார சின்ன கேஸ் கிட்ட வச்சிடுங்க இப்போ வட்டம் வரைஞ்சிடுங்க கழுத்து பகுதி வரைஞ்சுட்டீங்கன்னா பொங்கல் பானை ரெடி...
பெருங்காய டப்பா அல்லது பவுடர் டப்பா
சூடான ஊசியை கொண்டு டப்பா மூடியில மேலும் பல துளைகள் இட்டு ஒரே சமயத்தில் பல கோடுகளை வரைய பயன்படுத்தலாம்..
பிளாஸ்டிக் ஸ்பூன்கள்
சின்ன சின்ன ஸ்பூன்களை ஒரே மாதிரியாக புள்ளிகள் வைக்க பயன்படுத்தலாம் .. வட்டமாக ஸ்பூன்களை அடுக்கி வைத்துவிட்டு வெளிப்புறமா கோடு போட்டா பூக்களின் இதழ்களையும் வரைஞ்சுடலாம்.
என்ன கோலம் போட ஆரம்பிச்சிட்டீங்களா போட்டு முடிச்சு ஒரு போட்டோவும் எடுத்து அனுப்பிடுங்க...!
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்...ஏற்பாடுகள் தயார்
சிரிக்காதே என்னை சிதைக்காதே!
பிரதமர் மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தொடர் உயர்வில் தங்கம் வெள்ளி விலை... இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா?
பிளாக் டீ Vs க்ரீன் டீ... ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?
ஈஸியா கோலம் போடனும்னா இதை பண்ணுங்க.. சரோஜாதேவி காலத்து டிப்ஸ்தான்.. பட் ஒர்க் அவுட் ஆகும்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கலுக்குப் பின் விஜய்யிடம் விசாரணை...ஜன.,19ல் மீண்டும் அழைக்கப்பட வாய்ப்பு
{{comments.comment}}