- பூரணவள்ளி சேகர்
விக்னேஷ் மிகவும் திறமைசாலி. பொறியியல் முடித்து ஒரு தனியார் கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தான். கை நிறைய சம்பளம் வாங்கினாலும் திட்டமிட்டு செலவழிப்பவன்.
விக்னேஷுக்கு நல்ல நண்பர்கள் உடன் இருந்தனர். அனைவரும் நல்ல வேலையில் இருந்தனர். நண்பர்கள் அடிக்கடி மாலை வேளையில் சந்திப்பதுண்டு. அப்போதெல்லாம் நடைமுறையில் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் பற்றிப் பேசுவார்கள்.
ஒரு சிறு பிரச்சினை என்றால் கூட அரசாங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் சரியில்லை என்று விமரிசிப்பார்கள். அந்த நண்பர்களில் நவீனைத் தவிர மற்றவர்களில் ஒருவர் கூட நாம் அதைச் சரி செய்வோம் என்று யோசித்ததில்லை. நவீன் ஒருவனின் கருத்து அம்பலம் ஏறவில்லை.
அவர்களாகவே கூடிப் பேசும் பிரச்சினைகளை சமூக வலைதளங்களில் போட வேண்டும் என்று விக்னேஷ் சிந்தித்தான். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்கள் தீர்வு காண்பார்கள் என்று நினைத்தான்.
அடுத்த நாள் முதல் சந்தித்த பல சங்கடங்களும் சந்தோஷங்களும் சமூக வலைதளங்களில் பதிவேறின. பல பதிவுகளுக்கு அதிகமான நண்பர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

விக்னேஷ் வீட்டிலிருந்து முக்கிய சாலையில் திரும்பும் இடத்தில் மழையின் காரணமாக ஒரு பள்ளம் காணப்பட்டது.
அந்தப் பள்ளம் அடுத்த நாள் சமூக வலைதள பதிவாகி அநேக நண்பர்களின் விருப்பத்தைப் பெற்றது.
ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் திரும்புகையில் அந்த பள்ளத்தில் ஒருவர் விழுந்து விட்டதாக விக்னேஷ் அறிந்து மிகவும் கொதித்து விட்டான்.
வீட்டிற்கு வந்தவுடன் AI உதவியுடன் பள்ளத்தில் ஒரு முதியவர் விழுந்தது போல் வீடியோ தயாரித்து மிகவும் கோபமாக ஒரு பதிவைப் பதிவிட்டான்.
சிறிது நேரத்தில் விக்னேஷின் அலைபேசி சிணுங்கியது. அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து ஒருவர் பேசினார். உங்கள் தந்தை கீழே விழுந்து அடிபட்டிருப்பதால் வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.
அப்போதுதான் அங்கிருந்த பள்ளத்தில் தன்னைப் பார்ப்பதற்காக ஊரிலிருந்து வந்த அப்பாதான் விழுந்திருக்கிறார் என்று விக்னேஷ் உணர்ந்தான். மேலும் கோபம் அதிகமாகத் தலைக்கேறியது. தன் நண்பர்களுடன் அலைபேசியில் பகிர்ந்து கொண்டான்.
சிறுசிறு காயங்களுக்கு மருத்துவம் பார்த்த பின் விக்னேஷின் அப்பா வீட்டுக்கு வந்தார். நம் வீட்டருகில் உள்ள சிறு பள்ளத்தை நம்மால் முடிந்தவரை நாமே சரி செய்யலாமே என்ற நவீனின் கருத்து நண்பர்களின் காதுகளில் விழுந்தது.
நம் அருகில் உள்ள நம்மால் ஓரளவு சரிசெய்யக் கூடிய பிரச்சினைகளுக்கு வெறும் பதிவு போடுவது தீர்வாகுமா? என்று நவீன் நண்பர்களைக் கடிந்து கொண்டான்.
உடனுக்குடன் பள்ளம் சிறு கற்கள் மற்றும் மண்ணால் நண்பர்களால் மூடப்பட்டு தீர்வு காணப்பட்டது.
நமக்கு நடக்காத வரை எல்லா நிகழ்வுகளும் வெறும் செய்தியாகப் பகிரப்படும். நமக்கு நடக்கும் போது தான் பிரச்சினையின் தீவீரம் உணரப்படும் என்று நண்பர்கள் உணர்ந்தனர். அன்றிலிருந்து நண்பர்கள் குழு செயல்படும் குழுவாக மாறியது.
வெறும் பிரச்சினைகள் பகிரப்பட்டதுடன் பல நண்பர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் தீர்வுகளும் காணப்பட்டன.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
Don’t search for yourself, create yourself
முப்பது வருடங்களுக்கு முன் நடந்தது என்ன? - அவள் யாரென்று தெரியுமா? -(தொடர்கதை அத்தியாயம் 2)
Patience and Kindness
வெள்ளை நஞ்சு!
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் 2026: அன்ன வடிவில் ஈசன் அகிலம் காக்கும் ஈசன்!
தீர்வு.. ஒரு நிமிடக் கதை (45)
தென்தமிழ் தலையங்கம்: உலக இளம்பிள்ளை வாத நாள் - இன்னும் தொடரும் போராட்டம்!
வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!
தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு
{{comments.comment}}